விளையாட்டு
மகளிர் அணி கோப்பையை வென்றால் பெரிதாக இருக்கும்: காம்பீர்
மகளிர் அணி கோப்பையை வென்றால் பெரிதாக இருக்கும்: காம்பீர்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றால், 2011ல் நாங்கள் பெற்ற வெற்றியை விட பெரியதாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியை வென்று இந்திய அணி, உலகக்கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கூறும்போது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைக்க, இன்னும் ஒரு அடியைத்தான் கடக்கவேண்டி இருக்கிறது. அவர்கள் வெற்றி பெற்றால் நாங்கள் 2011-ம் ஆண்டு வெற்றி பெற்றதை விட பெரிதாக இருக்கும். மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அவர்கள் நிச்சயம் இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.