பிரியாவின் ’புருவ’ ரொமான்ஸ்: வெட்கத்தில் விழுந்த நிகிடி!

பிரியாவின் ’புருவ’ ரொமான்ஸ்: வெட்கத்தில் விழுந்த நிகிடி!

பிரியாவின் ’புருவ’ ரொமான்ஸ்: வெட்கத்தில் விழுந்த நிகிடி!
Published on

மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள 'மாணிக்க மலராயா பூவி' என்ற பாடல், கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சில காட்சிகளே வந்தாலும் அழகான புருவ அசைப்பினால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரே நாளில் புகழின் உச்சிக்கும் சென்றிருக்கிறார்.

பச்சக் என்று ஒட்டிக்கொள்கிற பிரியாவின் இந்த ரொமான்ஸ் எக்ஸ்பிரஷன் காரணமாக, இந்தி பட வாய்ப்பும் வந்திருக்கிறது அவருக்கு.

இந்நிலையில் பிரியாவின் எக்ஸ்பிரஷன்களை வைத்து ஏகப்பட்ட ட்ரோல் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. நம்மூர் வடிவேலுவில் இருந்து பிரதமர் மோடி வரை இந்த ட்ரோல் வீடியோவில் சிக்கி சிரித்திருக்கிறார்கள். 

இப்போது கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டார் ’புருவ’ பிரியா. சமீபத்தில் அந்த புருவ அசைப்பில் விழுந்திருப்பவர் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி.

காதலர் தினத்தன்று அவர் ட்விட்டரில் வாழ்த்து சொல்ல, குறும்புக்கார இந்திய ரசிகர் ஒருவர், ’உங்களுக்கு ஒரு கிஃப்ட். இதை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று ஒரு பிரியாவின் புருவ ரொமான்ஸையும் நிகிடியின் வெட்கத்தையும் இணைத்து ஒரு வீடியோவை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த நிகிடிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதற்கு ஐயோ, ஐயோ என்று ரிப்ளையும் அளித்துள்ளார் நிகிடி.

ச்சீ... வெட்கத்தைப் பாரு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com