ரோகித், கே.எல்.ராகுல், ரிஷப் இல்லை.. இவர்தான் கேப்டன் பொறுப்புக்கு சரியானவர் - நெஹ்ரா!

ரோகித், கே.எல்.ராகுல், ரிஷப் இல்லை.. இவர்தான் கேப்டன் பொறுப்புக்கு சரியானவர் - நெஹ்ரா!

ரோகித், கே.எல்.ராகுல், ரிஷப் இல்லை.. இவர்தான் கேப்டன் பொறுப்புக்கு சரியானவர் - நெஹ்ரா!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து நடப்பு டி20 உலகக் கோப்பையுடன் விலகுவதாக தெரிவித்திருந்தார் விராட் கோலி. இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் பொறுப்புக்கு வீரர்தான் சரி வருவார் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. 

“ரோகித் ஷர்மாவின் பெயர் மட்டுமல்லாது இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் மாதிரியான வீரர்களின் பெயர்களும் சொல்லப்பட்டு வருகின்றன. பண்ட் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விளையாடி உள்ளார். சமயங்களில் ஆடும் லெவனிலிருந்து நீக்கப்பட்டும் உள்ளார். அதே போல கே.எல்.ராகுல், மயங்க் அகர்வாலுக்கு மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். 

இருந்தாலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து பார்மேட் கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரரான பும்ரா, கேப்டன் பணியை கவனிக்க சரியான வீரர். ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக கூடாது என ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என்ன? அஜய் ஜடேஜா சொன்னதை போல பும்ரா ஆட்டத்தின் புரிதல் அவருக்கு நிறையவே உள்ளது” என தெரிவித்துள்ளார். 

அடுத்த வாரம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com