கால்குலேட்டர் சொல்லும் கணக்கு! ஆசியக்கோப்பை பைனலுக்கு இந்தியா செல்ல இதுதான் வழி!

கால்குலேட்டர் சொல்லும் கணக்கு! ஆசியக்கோப்பை பைனலுக்கு இந்தியா செல்ல இதுதான் வழி!
கால்குலேட்டர் சொல்லும் கணக்கு! ஆசியக்கோப்பை பைனலுக்கு இந்தியா செல்ல இதுதான் வழி!

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி. லீக் சுற்றின் இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளைப் பந்தாடிய இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான இந்தியாயின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

பைனலுக்கு இந்தியா செல்ல இதுதான் வழி:

சூப்பர் 4 சுற்றில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ள போதிலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. அதற்கு ஆர்சிபி அணி பயன்படுத்தும் அந்த கால்குலேட்டரை கொஞ்சம் தூசி தட்டிப் பார்ப்போம்.

1. ஷார்ஜாவில் இன்று (செப். 7) நடைபெறும் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைய வேண்டும். மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அல்லது குறுகிய ஓவருக்குள் இலக்கை எட்டி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பு.

2. நாளை (செப். 8) நடைபெறும் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அல்லது குறுகிய ஓவருக்குள் இலக்கை எட்டி வெற்றி பெறுவதும் அவசியம்.

3. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) அன்று இலங்கை - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைய வேண்டும். இதன்மூலம் இலங்கை அணி நேரடியாக ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துவிடும்.

இலங்கைக்கு எதிராக களமிறங்கும் எதிரணி எது என்பதில் மற்ற மூன்று அணிகளுக்குள்ளும் போட்டி ஏற்படும். மேற்குறிப்பிட்ட 3 அம்சங்களும் அப்படியே நடந்து, இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விட அதிக ரன் ரேட் பெற்றிருந்தால், இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

ஆனால் இந்த 3 அம்சங்களில் ஒன்று சொதப்பினால் இந்திய அணியின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு முழுவதுவாக முடிவை சந்திக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com