\
"இந்த இந்திய பேட்ஸ்மேன்தான் எனது ரோல் மாடல்" - தேவ்தத் படிக்கல்

"இந்த இந்திய பேட்ஸ்மேன்தான் எனது ரோல் மாடல்" - தேவ்தத் படிக்கல்

"இந்த இந்திய பேட்ஸ்மேன்தான் எனது ரோல் மாடல்" - தேவ்தத் படிக்கல்
Published on: 

அமீரகத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் சீசனிலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கலுக்கு வளர்ந்து வரும் வீரர் விருது அளிக்கப்பட்டுள்ளது. 

முதல் ஐபிஎல் சீசன் என்பது அல்லாமல் அவரது ஆட்டத்திறன் அபாரமாக இருந்தது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இவர் சிக்ஸர்களை காட்டிலும் நேர்த்தியான கிளாசிக் பவுண்டரிகளை அடிப்பதில் வல்லவர். 

பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெயில் இல்லாத குறையை நிரப்பியுள்ளார் அவர். அவரது பொறுமையான நேர்த்தியான ஆட்டம் பெங்களூரு அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளது.

இந்நிலையில் தனது ரோல் மாடல் யார் என்பதை தெரிவித்துள்ளார் படிக்கல்…

“இந்திய கிரிக்கெட் அணிக்காக ஓப்பனிங் விளையாடிய கவுதம் கம்பீர்தான் எனது ரோல் மாடல். அணி பிரஷரில் இருக்கும்போது அவரது ஆட்டம் அற்புதமாக இருக்கும். அதனால் தான் அவரை பிடிக்கும்.

இந்த சீசனில் என்னால் நிச்சயமாக ரன்களை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் விளையாடினேன்” என சொல்லியுள்ளார் அவர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com