அப்போது 17 வயது... முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்.. - சச்சினின் வரலாறு!!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் களத்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
1990களில் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்திய அணியில் பேட்ஸ்மேனாக இடம் பெற்றிருந்தார் 17 வயதேயான சச்சின் டெண்டுல்கர்.
"ஆகஸ்ட் 14 அன்று நான் எனது முதல் சதத்தை மான்செஸ்டரில் அடித்திருந்தேன். அடுத்த நாள் இந்திய விடுதலை நாள் என்பதால் எனக்கு அது எப்போதுமே நான் அடித்த சதங்களின் லிஸ்டில் சிறந்த ஒன்று.
அதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியை காப்பாற்றும் கலையை நான் கற்றுக் கொண்டேன். ஆனால் இந்த சதத்திற்கான விதை பாகிஸ்தானின் சியால்கோட்டில் விதைக்கப்பட்டன.
இரண்டவது இன்னிங்ஸில் 408 ரன்கள் டார்கெட்டை எதிர்கொண்டு விளையாடினோம். பேட்ஸ்மேன் மனோஜோடு அமைத்த பார்ட்னர்ஷிப் இந்த சதம் அடிக்க முக்கிய காரணம்” என சச்சின் தெரிவித்துள்ளார்.
189 பந்துகளில் 119 ரன்களை அடித்து இந்தியாவை தோல்வியிலிருந்து காத்து போட்டியை டிரா செய்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.