பாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம்: பயிற்சியாளர் கணிப்பு

பாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம்: பயிற்சியாளர் கணிப்பு
பாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம்: பயிற்சியாளர் கணிப்பு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இங்கு நடந்த போட்டிகளில் இந்திய அணி இதுவரை தோல்வியடையாமல் இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்திய அணியுடன் இரண்டு முறை தோல்வியை சந்திந்த பாகிஸ்தான் அணி அடுத்து பங்களாதேஷ் அணியுடன் நாளை மோதுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணியே இறுதி போட்டிக்கு நுழைய முடியும் என்பதால், பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி. 

இந்நிலையில் இந்திய அணியுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது ஏன் என்று அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கைப் பிரச்னை இருக்கிறது. எளிதாக வெல்லலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லாமல் போய்விடுகிறது. டிரெஸ்சிங் ரூமிலேயே பயம் வந்துவிடுகிறது. எங்கள் வீரர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த வில்லை. சிறந்த பந்துவீச் சாளர்கள் இருந்தும் அவர்கள் வீசியதில் முரண்பாடுகள் இருந்தன. இது ஏமாற்றமளித்தது. பீதி நிலையிலேயே, அழுத்தத்துடன் இருந்தால் விக்கெட் வீழ்த்துவது கடினம். அதோடு பயிற்சியின் போது, இந்திய பந்துவீச்சாளர் பும்ரா வீசுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் யார்க்கராக வீசி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்ததை ரசித்தேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com