தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பதா? அசாருதின் பாய்ச்சல்

தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பதா? அசாருதின் பாய்ச்சல்
தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பதா? அசாருதின் பாய்ச்சல்

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தேர்தலில் என்னை போட்டியிட விடாமல் தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதின் கூறியுள்ளார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் சென்றார். அவரைக் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காக்க வைக்கப்பட்டார். 
 
இதுபற்றி அசாருதின் கூறும்போது, ‘இந்த சங்கத்தின் நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறேன். இந்த ஊழல் நிர்வாகத்தை கலைக்க வேண்டும் என்று கூறுவதால் என்னை கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை.  இது 1932-ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிற சங்கம். நான் ஐதராபாத்தை சேர்ந்தவன். இந்திய கிரிக்கெட் அணிக்கு பத்தாண்டுகள் கேப்டனாக இருந்தவன். என்னை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்தது சங்கடமாக இருந்தது’ என்று ஆவேசமாகக் கூறினார்.

இந்த சங்கத்துக்கு நடக்க இருக்கும் தேர்தலில் அசாருதின் போட்டியிட இருந்ததாகவும் அதற்கு எதிர்ப்ப்த் தெரிவித்தே அவர் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அசாருதின் இன்று கூறும்போது, ” என்னை ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலில் என்னை போட்டியிட விடாமல் தடுக்கிறார்கள். இது என் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். என்னை தடுப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடர இருக்கிறேன்; என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com