2018-ம் ஆண்டில் நடத்தப்படுவதாக இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி 2020-ம் ஆண்டு நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டி கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்தது. அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2018-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் அந்த போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கைவிட்டுள்ளது. முன்னணி நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக இரு நாட்டு தொடர்களில் விளையாடுவதால் அந்தப் போட்டி கைவிடப்படுகிறது. எனவே 7 வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2020 -ம் ஆண்டில் நடத்தப்படும்.