“கால்பந்தாட்டத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி இனவெறிக்கு இடமே இல்லை” - நெய்மர்

“கால்பந்தாட்டத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி இனவெறிக்கு இடமே இல்லை” - நெய்மர்
“கால்பந்தாட்டத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி இனவெறிக்கு இடமே இல்லை” - நெய்மர்

கால்பந்தாட்ட உலகின் உச்ச நட்சத்திர வீரர்களில் ஒருவர் பிரேசில் நாட்டை சேர்ந்த நெய்மர். தற்போது UEFA சாம்பியன்ஸ் லீக்கில் PARIS SAINT-GERMAIN (PSG) அணிக்காக விளையாடி வருகிறார்.  கடந்த செவ்வாய் அன்று İstanbul Başakşehir அணி உடன் PSG அணி விளையாடியது. 

அப்போது போட்டியின் நான்காவது நடுவராக செயல்பட்டவர் இனவெறியை தூண்டும் வகையில் வசைபாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைதானத்தில்  விளையாடுவதை ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் நிறுத்தி விட்டு இரு அணி வீரர்களும் வெளியேறினர்.

“நடந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனவெறி ரீதியாகவும், நிறத்தின் ரீதியாகவும் ஒருவரை தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கால்பந்தாட்டத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி இனவெறிக்கு இடமே இல்லை” என நெய்மர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்தது அந்த சர்ச்சைக்கு ஆளான நடுவரை மாற்றியதோடு புதன் அன்று இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் விளையாடினர். ஆட்டத்தின் முடிவில் PSG அணி 5 - 1 என வென்றது. நெய்மர் மூன்று கோள்களும், மாஃப்பெ இரண்டு கோள்களும் PSG அணிக்காக அடித்திருந்தனர். இதற்கு முன்னதாக நெய்மர் கடந்த செப்டம்பர் மாதம் MARSEILLE அணியுடனான ஆட்டத்தின் போது இனவெறி தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com