'பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை' - ஷேன் வாட்சன் ஆரூடம்

'பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை' - ஷேன் வாட்சன் ஆரூடம்
'பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை' - ஷேன் வாட்சன் ஆரூடம்

'டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா இல்லையென்றால் இந்திய அணிக்கு அது பேரிழப்பாகும்' என்று தெரிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.  

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரும் 6ம் தேதி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சூழலில்தான் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு முதுகில் உள்ள எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த 4-5 மாதங்களுக்கு ஓய்வு தேவை என்பதாலும் வெளியேறுவதாக விளக்கம் அளித்தனர். இதனால் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்ற குழப்பம் நிலவுகிறது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து பும்ராவின் விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், ''பும்ராவுக்கு மாற்று உலகில் யாரும் இல்லை. டி20 உலகக் கோப்பையில் பும்ரா இல்லையென்றால் இந்திய அணிக்கு அது பேரிழப்பாகும். நம்பமுடியாத திறமை படைத்த பும்ரா சிறந்த தாக்குதல் பந்து வீச்சையும் தொடுக்கக் கூடியவர். பும்ரா இல்லாமல் ஒரு இன்னிங்ஸை முடிப்பது என்பது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்'' என்றார்.

பும்ராவை உலகக்கோப்பையில் விளையாட வைக்க வேண்டும் என விரும்பும் பிசிசிஐ, தொடர்ச்சியாக அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. இதனிடையே பும்ராவின் ஃபிட்னெஸ் குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ''பும்ரா இதுவரை டி20 உலக கோப்பையிலிருந்து விலகவில்லை. தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து மட்டுமே விலகியுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் பும்ராவின் உடல்நிலை குறித்த அப்டேட்டுக்காக காத்திருக்கிறோம். அதன்பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க வேண்டும்'' என்றார்.

இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் வெளியேறவில்லை - சவுரவ் கங்குலி நம்பிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com