\
“கேப்டன் பதவி காலியாக இல்லை” - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

“கேப்டன் பதவி காலியாக இல்லை” - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

“கேப்டன் பதவி காலியாக இல்லை” - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்
Published on: 

ஆஸ்திரேலிய அணியில் இப்போதைக்கு கேப்டன் பதவி காலியாக இல்லை என அறிவித்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர். அனுபவ வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த வாய்பு கிடைத்தால் அது குறித்து பரிசீலனை செய்வேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் லாங்கர் இதனை தெரிவித்துள்ளார். 

“எங்கள் அணியை இரண்டு அற்புதமான கேப்டன்கள் வழிநடத்தி வருகின்றனர். அதுவும் அடுத்தடுத்த நாட்களில் ஆஷஸ் தொடரிலும், டி20 உலக கோப்பையிலும் நாங்கள் பங்கேற்க உள்ளோம். ஊடகங்கள் ஊகத்தின் அடிப்படையில் பல விஷயங்களை சொன்னாலும் ஆஸ்திரேலிய அணியில் இப்போதைக்கு கேப்டன் பதவி காலியாக இல்லை” என லாங்கர் தெரிவித்துள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் கேப்டன்சி பொறுப்பை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com