'இந்திய அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்' - கேன் வில்லியம்சன்

'இந்திய அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்' - கேன் வில்லியம்சன்
'இந்திய அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்' - கேன் வில்லியம்சன்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். மார்டின் கப்தில், டிரென்ட் போல்ட் இருவரும் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்றில் பாகிஸ்தானிடம் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்திடம் இந்திய அணியும் தோற்று வெளியேறின. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் (நவ.18) வெலிங்டனில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்குகிறது. ஒருநாள் போட்டியில் இந்திய அணியை தவான் வழிநடத்துகிறார்.

மறுபுறம், இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். தொடக்க வீரர் மார்டின் கப்தில், வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியுடனான தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ''இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டிரென்ட் போல்ட் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என்று நம்புகிறேன்'' என்றார்.

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்பாக கேன் வில்லியம்சனை தக்கவைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை விடுவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ''சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பல மகிழ்ச்சியான நேரமும், பல  நினைவுகளும் இருந்தன'' என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார் மற்றும் உம்ரான் மாலிக்.

நியூசி. டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைகேல் பிரேஸ்வெல், டிவோன் கான்வே (கீப்பர்), லோக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ஈஷ் சோதி, பிளேர் டிக்னர்.

இதையும் படிக்கலாமே: விடுவித்தது மும்பை அணி.. உருக்கமான பதிவுடன் ஐபிஎல்-க்கு விடை கொடுத்தார் பொல்லார்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com