\
13 ஆண்டுகளுக்கு பின்பு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

13 ஆண்டுகளுக்கு பின்பு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

13 ஆண்டுகளுக்கு பின்பு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களும் மேற்கு இந்திய தீவுகள் அணி 297 ரன்களும் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து120 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என மேற்கு இந்திய தீவுகள் அணி கைப்பற்றி அசத்தியது. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை மேற்கு இந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: கடைசி ஓவரில் வீசிய 'நோ-பால்' -தொடரை விட்டு வெளியேறியது இந்தியா!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com