நியூசி. வீரர்களுக்கு சவால்விட்ட வெயில்!

நியூசி. வீரர்களுக்கு சவால்விட்ட வெயில்!
நியூசி. வீரர்களுக்கு சவால்விட்ட வெயில்!

’மும்பையின் வெயில் சவாலாக இருந்தது’ என்று நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் கேப்டன் கனே வில்லியம்சன் கூறினார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்திய கேப்டன் விராத் கோலி சதமடித்தார். நியூசிலாந்து அணியில் லாதம் சதமடித்தார். மும்பையின் வெயில் நியூசிலாந்து வீரகளுக்கு மட்டுமல்லாமல் இந்திய வீரர்களுக்கும் சவாலானதாக இருந்தது. 

வெற்றிக்கு பின் பேசிய நியூசிலாந்து கேப்டன், கேன் வில்லியம்சன், ‘இந்திய கேப்டன் விராத் கோலி சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் ஆட்டம் அருமையாக இருந்தது. நான் பார்த்தவரையில் இந்த சேஸிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என நினைக்கிறேன். ராஸ் டெய்லரும் லாதமும் பொறுப்புடன் நிலைத்து நின்றனர். மிடில் ஓவர்களில் அவர்கள் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. இதுதான் எங்கள் தேவையாகவும் இருந்தது. மும்பையின் வெயில் எங்களுக்கு சவாலாக இருந்தது’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற, டாம் லாதம் கூறும்போது, ‘50 ஓவர்கள் முழுவதுமாக நின்று ஆடியது கடினமாக இருந்தது. குறிப்பாக வெயில். இந்தப் போட்டியில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆடினேன். இதற்கு முன் அப்படி ஆடியதில்லை. எதிர்முனையில் ஆடிய டெய்லரும் நானும் பேசிக்கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டே விளையாடினோம். அதனால் சாதிக்க முடிந்தது’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com