பாகிஸ்தான் கேப்டனின் மகளுடன் கொஞ்சி விளையாடிய இந்திய வீராங்கனைகள் - வெளியான 'க்யூட் வீடியோ
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ இரு நாட்டு ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ இரு நாட்டு ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மஹரூஃபின் குழந்தையைக் காண, வீராங்கனைகள் தயாராகும் அறைக்கு இந்திய அணியினர் சென்றிருந்தனர். அங்கு பிஸ்மாவின் குழந்தை ஃபாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர். விளையாட்டின் மாண்பைக் காப்பதற்கான முதல் பாடத்தை ஃபாத்திமா கற்றுக் கொண்டிருப்பார் என குறிப்பிட்டு ஐசிசி தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
வீடியோவை காண... https://fb.watch/bBfmDheEWi/