இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டி - வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது.
முதல் போட்டி லக்னோவில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கிறது. முன்னனி வீரர்கள் கோலி, பண்ட் ஆகியோருக்கு இலங்கையுடான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபார்மில் இருந்த சூர்யகுமார், தீபக் சஹார் ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். மறுபுறமும் காயத்தில் இருந்த மீண்ட அனுபவ ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், ஓய்விலிருந்த பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணிக்கு திரும்பியுள்ளார்.
மறுபுறம் ஷனக்கா தலைமையிலான இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, தற்போது இந்திய பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: 'ரோகித் உள்பட எல்லோரும் அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம்’- ராகுல் டிராவிட்

