ஓய்வை உறுதி செய்தார் டென்னிஸ் நாயகி மார்ட்டினா ஹிங்கிஸ்

ஓய்வை உறுதி செய்தார் டென்னிஸ் நாயகி மார்ட்டினா ஹிங்கிஸ்

ஓய்வை உறுதி செய்தார் டென்னிஸ் நாயகி மார்ட்டினா ஹிங்கிஸ்
Published on

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜாம்பவான் டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் அறிவித்திருந்தார். கடைசியாக, சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தைவான் வீராங்கனை சான் யங் ஜானுடன் இணைந்து ஹிங்கிஸ் விளையாடினார். அரையிறுதியில் தோல்வியடைந்த ஹிங்கிஸ், டென்னிஸ் ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுத்தார். 37 வயதாகும் மார்டினா ஹிங்கிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒற்றையர் பிரிவில் 5 பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 13 பட்டங்களையும் வென்ற பெருமைக்குரியவர். இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா ஆகியோருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் பல முக்கிய பட்டங்களை ஹிங்கிஸ் வென்றிருக்கிறார்.

கடந்த 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்த மார்டினா ஹிங்கிஸ் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு களமிறங்கினார். ஆனால் தற்போதைய தனது முடிவில் எந்த மாற்றமும் ஏற்படாது என அவர் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com