கிரிக்கெட் வீரர்களும் ஜெர்சி ரகசியங்களும்

கிரிக்கெட் வீரர்களும் ஜெர்சி ரகசியங்களும்

கிரிக்கெட் வீரர்களும் ஜெர்சி ரகசியங்களும்
Published on

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராத் கோலி, பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் அணியும் ஜெர்சியில் உள்ள எண்களுக்குப் பின்னால் சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.

கிரிக்கெட் வீரர்கள் அணிந்துள்ள ஜெர்சிக்கு பின்னால் ஒர் எண் எழுதப்பட்டிருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் ஜெர்ஸிக்கு பின்னால் 18 என்ற எண் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணுக்கும் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு. கோலிக்கு கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை ஊக்குவித்து அவரை முறையாக பயிற்சிக்கு அனுப்பியது அவரது தந்தைதான். 

ஆனால் கோலி இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று கனவு கண்ட அவரது தந்தை கோலி இந்திய அணிக்கு விளையாடும் போது அதைக் காண முடியவில்லை. கோலிக்கு 18 வயதாக இருந்த போதே அவரது தந்தை காலமானார். அவரை நினைவுகூறும் விதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய  கிரிக்கெட் அணியில் கோலி விளையாட ஆரம்பித்தது முதல் தனது ஜெர்சிக்கு பின்னால் 18 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறார். இன்று வரை அதையே அவர் தொடர்கிறார். 

இந்திய அணிக்கு இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வாங்கிய தந்த தோனி தனது ஜெர்சிக்கு பின்னால் 7 என்ற எண்ணை வைத்திருக்கிறார். தோனி தனது பிறந்தநாள் ஜூலை 7 என்பதால் இந்த எண்ணை ஜெர்சி நம்பராக வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். தோனிக்கு கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எரிக் கேண்டேனோவை பிடிக்கும், என்பதால் அவர்கள் பயன்படுத்தும் எண் 7 என்பதால் அதே எண்ணை பயன்படுத்துகிறார் என்றும் கூறுகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் 12 என்ற எண்ணை தனது பயன்படுத்துகிறார். யுவராஜ் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பிறந்தார். அதனால் அவர் அந்த எண்ணைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக உருவெடுத்து வரும் ஹர்திக் பாண்ட்யா 228 என்ற எண்ணை பயன்படுத்துகிறார். இவர் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பையை எதிர்த்து பரோடா அணிக்காக விளையாடிய போது அதிகபட்சமாக 228 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் அவரால்தான் பரோடா அணி வெற்றி பெற்றது. அந்த 228 ரன்னையே தனது ஜெர்சி எண்ணாக பயன்படுத்தி வருகிறார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com