\
செஸ் ஒலிம்பியாட் - விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2ஆவது சுற்று

செஸ் ஒலிம்பியாட் - விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2ஆவது சுற்று

செஸ் ஒலிம்பியாட் - விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2ஆவது சுற்று
Published on

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் துவங்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. தற்போது வரை பெரும்பாலான வீரர்களுடைய போட்டி ஆனது சரிசமமான நிலையில் உள்ளது. இரண்டாவது சுற்றை  பொறுத்தவரை நேற்றைய விட இன்றைய போட்டிகள் சற்று கடினமாக இருக்கிறது. அதன் காரணமாக இந்திய அணி வீரர்களும் கூட மிகவும் பொறுமையாக தான் இன்றைய போட்டியில் தொடங்கி இருக்கிறார்கள்.  குறிப்பாக இந்தியாவின் மூத்த வீரரான தமிழகத்தை சேர்ந்த சசிகரன் போட்டி துவங்கி கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு தான் தன்னுடைய முதல் நகர்த்தலையே ஆரம்பித்தார்.

இதையும் படிக்க: சார்' என்றுதான் அழைக்க வேண்டும் -சச்சினை வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com