“இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் புதுவிதமான தொற்று” - ரிஷப் பன்ட்

“இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் புதுவிதமான தொற்று” - ரிஷப் பன்ட்
“இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் புதுவிதமான தொற்று” - ரிஷப் பன்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் தொற்று இருப்பதாக இளம் வீரர் ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்த அணி, டி20 தொடரை கைப்பற்றியது. ஆனால் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய ஏ அணியில் விளையாடி வரும் ரிஷப், இங்கிலாந்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான முத்தரப்பு போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் தற்போது டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். 20 வயது நிரம்பிய இவர், கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷூக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் தற்போது தான் இவர் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார்.

பன்ட்க்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது ஐபிஎல்தான். முடிந்த ஐபிஎல் போட்டியில் கூட அவர் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். இதுவரை 38 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1248 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் (128) அடங்கும். இதுவும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம் ஆகும். வாய்ப்பை கிடைத்துள்ளதை அடுத்து, பன்ட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணி குறித்து பேசியுள்ள அவர், “இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நேர்மறையான எண்ணமே தொற்றிவருகிறது. சீனியர்கள் மத்தியில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை திறம்பட பயன்படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com