சாஹலை 15வது மாடியிலிருந்து தொங்கவிட்ட வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்கவேண்டும்: ரவி சாஸ்திரி

சாஹலை 15வது மாடியிலிருந்து தொங்கவிட்ட வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்கவேண்டும்: ரவி சாஸ்திரி
சாஹலை 15வது மாடியிலிருந்து தொங்கவிட்ட வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்கவேண்டும்: ரவி சாஸ்திரி

15வது மாடியில் இருந்து யஸ்வேந்திர சாஹலை தலைகீழாக தொங்கவிட்ட வீரருக்கு வாழ்நாள் தடை விதித்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப வேண்டுமென ரவி சாஸ்திரி பேட்டியொன்றில் காட்டமாக பதிலளித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் கருண் நாயர் ஆகியோரிடம் பேசிய சாஹல், 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய போது நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் குறித்து பேசியிருந்தார். “2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது பெங்களூரில் ஒரு மேட்ச் நடந்தது. அதன் பிறகு நடந்த ஒரு சந்திப்பில் மிகவும் குடிபோதையில் ஒரு வீரர் இருந்தார், நான் அவருடைய பெயரை சொல்ல மாட்டேன். அவர் என்னை வெளியே அழைத்துச் சென்று 15 வது மாடியில் இருந்த பால்கனியில் இருந்து தொங்கவிட்டார். அங்கு இருந்த பலர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறிய தவறு நடந்திருந்தால், நான் கீழே விழுந்திருப்பேன்” என்று சாஹல் கூறினார்.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “சம்பந்தப்பட்டவர் யாரென்று எனக்குத் தெரியாது. இது வேடிக்கையானது என்று சிலர் நினைக்கலாம். ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த செயல் எனக்கு வேடிக்கையாக இல்லை, அதைச் செய்ய முயற்சிப்பவர் பொருத்தமற்ற நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட முயற்சியில் நீங்கள் இருக்கும்போது, தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற கடுமையான விஷயத்தை நான் கேட்பது இதுவே முதல் முறை. இப்படி ஒரு சம்பவம் நடந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு வாழ்நாள் தடை விதித்து, அந்த நபரை விரைவில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புங்கள். அவர் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் வராமல் இருப்பது நல்லது! அது எவ்வளவு வேடிக்கையானது அல்ல என்பதை அவர் புரிந்துகொள்வார், ”என்று கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களை வீரர்கள் உடனடியாகப் புகாரளிப்பது முக்கியம் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். “உங்களுக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்றும் நடக்க வேண்டாம். அப்படி ஏதாவது நடந்தால், நீங்கள் மேலே சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல வேண்டும். இது போன்ற சம்பவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி அவர்களுக்கு தெரியப்படுத்துவது உங்கள் வேலை" என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com