சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!

சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!

சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
Published on

முழங்கை உபகரணத்தில் மாற்றம் செய்ய சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது. 

சச்சினை சந்தித்து ஆலோசனை அளித்த ‌தருணம் வாழ்வில் மறக்க முடியாதது என புதிய தலைமுறையிடம் குருபிரசாத் தெரிவித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டியில் விளையாட சென்னை வந்தபோது, தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியுள்ளார். அப்போது அவரை சந்தித்த ஓட்டல் ஊழியர் ஒருவர், சச்சின் அணிந்து விளையாடும் எல்போ‌ கார்டு எனும் முழங்கை உ‌பகரணம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உகந்ததாக இல்லை என கூறியுள்ளார். 

அந்த ஆலோசனை தனக்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். அந்த ஊழியரை சந்திக்க ஆவலமாக இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க உதவுமாறும் டுவிட்டரில் சச்சின் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com