டேவான் கான்வே 'டக் அவுட்' - பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்!

டேவான் கான்வே 'டக் அவுட்' - பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்!
டேவான் கான்வே 'டக் அவுட்' - பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மிர் ஹம்சா, இன்றைய போட்டியில் நியூசிலாந்து தொடக்க பேட்டரை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கராச்சியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் சமனில் முடிந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கராச்சியில் கடந்த ஜனவரி 2ஆம் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவன் கான்வே 122 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரர் அகமது 4 விக்கெட்களை வீழ்த்தினார். நஷீம் ஷா மற்றும் சல்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாண்ட பாகிஸ்தான் அணி, 10 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் சவுத் ஷகீல் 125 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அஜாஜ் படேல் மற்றும் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 41 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, நான்காவது நாளான இன்று (ஜனவரி 5) தற்போது வரை 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் மிர் ஹம்சா இன்று வீசிய தன்னுடைய முதல் ஓவரின் முதல் பந்திலேயே நியூசிலாந்தின் தொடக்க பேட்டரான தேவன் கான்வேவை கோல்டன் டக் அவுட்டாக்கி (ரன் எதுவுமின்றி) வெளியேற்றினார். இந்த கான்வேதான், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து நியூசிலாந்து அணி அதிக ரன் குவிக்க வழிகாட்டியவர்.

அவரை, இந்த முறை டக் அவுட்டாக்கி வெளியேற்றி இருப்பதால் பாகிஸ்தான் அணி சந்தோஷத்தில் உள்ளது. அதுவும், முதல் டெஸ்ட் மற்றும் இரண்டாது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் எந்த விக்கெட்டையும் வீழ்த்தாத ஹம்சா, இதன்மூலம் சாதனை படைத்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஹம்ஸா வீழ்த்திய இரண்டாவது டெஸ்ட் விக்கெட் இதுவாகும். அவர், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களை எடுத்துள்ளார்.

கராச்சியைச் சேர்ந்த 30 வயதான ஹம்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தலைமையிலான இடைக்கால தேர்வுக் குழுவால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com