“நியூசிலாந்து அணியின் பேட்டிங் வலுவானதாக இல்லாதது ஆப்கன் அணிக்கு சாதகம்!”-அஜித் அகர்கர்

“நியூசிலாந்து அணியின் பேட்டிங் வலுவானதாக இல்லாதது ஆப்கன் அணிக்கு சாதகம்!”-அஜித் அகர்கர்
“நியூசிலாந்து அணியின் பேட்டிங் வலுவானதாக இல்லாதது ஆப்கன் அணிக்கு சாதகம்!”-அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கன் அணி வெல்லுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார். 

“ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்த வாய்ப்புகள் உள்ளன. அவர்களது அணியில் திறன் படைத்த பவுலர்களும், வீரர்களும் உள்ளனர். அது பகல் ஆட்டமாக நடைபெறுவதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீசுவதில் சிரமம் இருக்காது. மறுபக்கம் நியூசிலாந்து அணியின் பேட்டிங் லைன் அப்பும் வலுவனதாக இல்லை. அதனால் ஆப்கன் அணி சிறப்பாக பந்துவீசினால் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முடியும். 

அந்த போட்டி ஒரு நாக்-அவுட் போட்டியை போன்றது. அதில் ஆப்கன் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அமையலாம்” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் இரண்டு போட்டிகளில் இந்த மைதானத்தில் விளையாடி உள்ளது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும், தோல்வியும் ஆப்கன் அணி பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com