"தன் ஸ்டைலில் ஓய்வை அறிவித்த தோனி" குவியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

"தன் ஸ்டைலில் ஓய்வை அறிவித்த தோனி" குவியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் !
"தன் ஸ்டைலில் ஓய்வை அறிவித்த தோனி" குவியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை இன்று அறிவித்தார். இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்களும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பதிவில் "ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பயணமும் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தங்களது ஓய்வு குறித்து அறிவிக்கும்போது உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க முடிவதில்லை. நீங்கள் இந்த நாட்டுக்கு செய்தது எப்போதும் மக்களின் இதயத்தில் மாறாமல் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தன் பதிவில் "ஒரு சாதனையாளர் தனக்கே உரிய பாணியில் ஓய்வை அறிவித்திருக்கிறார். மாஹி பாய் நீங்கள் இந்த நாட்டுக்காக நிறைய கொடுத்திருக்கிறீர்கள். சாம்பியன்ஸ் டிராபி, 2011 உலகக் கோப்பையில் உங்களுடன் பயணித்த நாள்கள் எப்போதும் என் நினைவில் இருக்கும். உங்களின் எதிர்காலம் சிறக்க என்னுடைய வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா "இந்திய கிரிக்கெட்டில் சிலரது இடங்களை நிரப்ப முடியாது, மாஹி பாய் நீங்களும் அதில் ஒருவர்" என உணர்ச்சிமிகு பதிவிட்டு இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் " உங்களின் பயணம் இந்திய ஏ அணியில் தொடங்கி இந்திய சீனியர் அணி வரை பல்வேறு கேள்விக்குறிகள், கமாக்கள், வெறுமை என பலவிதமான கலவைகளை கொண்டது. ஆனால் இதற்கெல்லாம் இறுதியாக உங்களின் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் இனி வரும் வாழ்க்கை ஆச்சர்யமானதாக இருக்கும் இந்த டிஆர்எஸ்க்கு அளவே இல்லை" என பதிவிட்டுல்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா "எப்போதும் ஒரே தோனிதான். என்னுடைய நண்பர், மூத்த அண்ணன் என்னுடைய உந்துதலுக்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து நீல ஜெர்சியில் விளையாடுவதை நிச்சயம் மிஸ் செய்வேன், ஆனால் எப்போதும் என்னை நீங்கள் வழி நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com