74 ரன்னில் சுருண்ட தாய்லாந்து.. கெத்தாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மளிர் அணி!

74 ரன்னில் சுருண்ட தாய்லாந்து.. கெத்தாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மளிர் அணி!

74 ரன்னில் சுருண்ட தாய்லாந்து.. கெத்தாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மளிர் அணி!

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 8வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வங்கதேசத்தில் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. ஏழு அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், தாய்லாந்து அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்களும் எடுத்தனர்.

இலக்கை விரட்டிய தாய்லாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சில் திணறின. அந்த அணியின் கேப்டன் சாய்வய் (21), நட்டயா பூச்சதம் (21) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இறுதியாக 74 ரன்களுக்கு தாய்லாந்து அணி சுருண்டது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம் 8வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையும் படிக்க: உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்.. டாப் 5ல் 4 இந்திய வீரர்கள்.. முதலிடம் யார் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com