\
பாராலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதலில் தங்கம், வெள்ளி வென்று அசத்திய இந்திய வீரர்கள்

பாராலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதலில் தங்கம், வெள்ளி வென்று அசத்திய இந்திய வீரர்கள்

பாராலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதலில் தங்கம், வெள்ளி வென்று அசத்திய இந்திய வீரர்கள்
Published on
பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப் பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர். 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்க்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34-வது இடத்தில் இந்தியா உள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com