\
ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை: தகுதிச் சுற்றில் மோதும் அணிகள் எவை?

ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை: தகுதிச் சுற்றில் மோதும் அணிகள் எவை?

ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை: தகுதிச் சுற்றில் மோதும் அணிகள் எவை?
Published on

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பிரதான அணிகள் இடம்பெறும் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்பதற்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இரு பிரிவுகளாக 8 அணிகள் மோதுகின்றன. இதில் க்ரூப் ஏ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை மற்றும் நமீபியா அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளையில் க்ரூப் பி பிரிவில் ஓமன், பப்புவா நியூ கினி, ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த இரு பிரிவில் முதல் இரு இடங்கள் பிடிக்கும் அணிகள் பிரதான அணிகளுடன் சூப்பர் 12 சுற்றில் மோதும் வாய்ப்பை பெறும். தகுதிச் சுற்றுப்போட்டிகள் மற்றும் லீக் போட்டிகள் ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். அதில் முதல் போட்டி பிற்பகல் 2 மணிக்கும், இரண்டாவது போட்டி மாலை 6 மணிக்கும் தொடங்கும்.

தகுதிச் சுற்றுப் போட்டிகளின் விவரம்

அக்டோபர் 17 - ஓமன் Vs பப்புவா நியூ கினி, வங்கதேசம் Vs ஸ்காட்லாந்து

அக்டோபர் 18 - அயர்லாந்து Vs நெதர்லாந்து, இலங்கை Vs நமீபியா

அக்டோபர் 19 - ஸ்காட்லாந்து Vs பப்புவா நியூ கினி, ஓமன் Vs வங்கதேசம்

அக்டோபர் 20 - நமீபியா Vs நெதர்லாந்து, இலங்கை Vs அயர்லாந்து

அக்டோபர் 21 - வங்கதேசம் Vs பப்புவா நியூ கினி, ஓமன் Vs ஸ்காட்லாந்து

அக்டோபர் 22 - நமீபியா Vs அயர்லாந்து, இலங்கை Vs நெதர்லாந்து

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com