29 ஆயிரம் குத்துகள்...57 மில்லியன் டாலர் வருமானம்...

29 ஆயிரம் குத்துகள்...57 மில்லியன் டாலர் வருமானம்...

29 ஆயிரம் குத்துகள்...57 மில்லியன் டாலர் வருமானம்...
Published on

அமெரிக்காவின் குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூன் 3)தான் மரணமடைந்தார்.
அவரது முதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கென்ட்டகி மாகாணத்தில் முகமது அலி வாழ்ந்த வீடு புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அந்த வீடு முகமது அலியின் புகைப்படக் காட்சியகமாக மாற்றப்பட்டது. அப்போது முதல் இதுவரை 10, ஆயிரம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். அந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதற்கு அம்மாகாண அரசின் உதவியை அந்த வீட்டின் பராமரிப்பாளர்கள் கோரி வருகின்றனர். 

முகமது அலி 1960 முதல் 1981 வரை  தொழில் முறையாக 61 போட்டிகள் உட்பட பல குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 1984ல் நடைபெற்ற ஒரு விழாவில் தான் வாங்கிய பஞ்ச்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது ‘இன்று நான் மெதுவாகப் பேசுகிறேன் என மக்கள் சொல்கிறார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் நான் வாங்கி குத்துகள் அத்தனை. இதுவரை விளையாடிய போட்டிகளில் வாங்கிய குத்துகளை எண்ணி வந்திருக்கிறேன். 29 ஆயிரம் குத்துகள் மொத்தம். ஆனால் அதற்காக எனக்குக் கிடைத்த வருமானம் 57 மில்லியன் டாலர்’ என்றார் முகமது அலி!
  
குத்துச்சண்டையின் போது, பலமுறை தலையில் அடிபட்டதால், முகமது அலிக்கு தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது. கடந்த  2013ல் கடும் உடல்நலைக் குறைவால் பாதிக்கப்பட்ட அலி, ஓரிரு மாதங்கள் கூட தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், அதையும் தாண்டி வந்தார் அலி. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு. சிறுநீரகக் கோளாறு , என பல நோய்கள் அலியை வதைத்தன. இதனையடுத்து யாராலும் வெல்ல முடியாத முகம்மது அலியை மரணம் வென்றது கடந்த ஆண்டு இதே நாளில் தான்..! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com