செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல்வர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அரசாணை வெளியீடு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல்வர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அரசாணை வெளியீடு
செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல்வர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அரசாணை வெளியீடு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழக அரசால் மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில், 180 நாடுகளைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒருங்கிணைத்து நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை, விளையாட்டுத் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு துறைகளைச் சார்ந்த செயலாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக்குழு, அவ்வப்போது கூடி ஆய்வுக் கூட்டங்கள் மேற்கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தொடரும் அவலநிலை - கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com