இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி, 20 ஓவர் தொடரை மூன்றுக்கு, பூஜ்யம் என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பர்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி ஆகியோருக்கும் இந்த தொடரில் முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் அனுபவம் குறைந்த வீரர்களுடன், நியூசிலாந்து அணியை, இந்திய அணி எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com