வெற்றிக்கணக்குடன் பயணத்தை தொடங்குமா இந்திய அணி? - முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

வெற்றிக்கணக்குடன் பயணத்தை தொடங்குமா இந்திய அணி? - முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

வெற்றிக்கணக்குடன் பயணத்தை தொடங்குமா இந்திய அணி? - முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்
Published on

இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சிட்டகாங்கில் இன்று காலை 9 மணி அளவில் தொடங்குகிறது.

இந்திய அணி வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை வங்கதேசம் 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் தொடங்குகிறது. காயம் காரணமாக ரோகித் சர்மா நாடு திரும்பியுள்ளதால், கேப்டன் பொறுப்பை ராகுல் கவனிக்கவுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் விசா பிரச்சனை காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ள வங்கதேச அணி வீரர்கள், டெஸ்ட் போட்டியிலும் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில் 9 முறை இந்தியாவும், இரண்டு முறை போட்டி டிராவிலும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு வங்கதேச தொடர் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இதுவரை இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது இல்லை. எனினும் ரோகித் சர்மா, பும்ரா, முகம்மது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை கொடுக்கக்கூடும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மான் கில் அல்லது அபிமன்யு ஈஸ்வரன், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேசம்: மக்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), லிட்டான் தாஸ், நுருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிபுல் இஸ்லாம், கலித் அகமது, எபாதத் ஹூசைன்.

தவற விடாதீர்: ஐபிஎல் ஏலத்தில் முக்கிய இந்திய, வெளிநாட்டு வீரர்கள் யார், யார்? விலை எப்படி? - முழு விபரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com