அந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி

அந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி

அந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி
Published on

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் முதல் ஒரு மணி நேரம் முக்கியமானது என்று இந்திய அணி வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் என்ற புதிய மைதானத்தில் நேற்று தொடங்கியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் காயம் காரணமாக ரோகித் சர்மா, அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக விஹாரியும் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்துள்ளது. அந்த அணியின் ஆரோன் பின்ச், ஹாரிஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அரைசதம் அடித்தனர். கேப்டன் டிம் பெய்ன் 16 ரன்னுடனும் கம்மின்ஸ் 11 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.
இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, விஹாரி தலா 2 விக்கெட்டும், பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்கிறது.

முதல் நாள் ஆட்டத்திற்கு பின், ஹனுமா விஹாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பந்தை அடிக்க முடியாதபடி வீச வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே சரியான இடத்தில் வீசினேன். விக்கெட் கிடைத்தது போனஸ். அணிக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. அனைத்துவிதமான முயற்சிக்கும் தயாராகவே இருந்தேன். 2-வது நாள் ஆட்டத்தில், முதல் ஒரு மணி நேரம் முக்கியமானது. 320 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்திவிட்டால், போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பும்.

பின் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தால், வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. அதனால் நாளைய (இன்று) போட்டியின் முதல் ஒரு நாள் முக்கியமானது. இந்த ஆடுகளத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். அதை சரியாக செய்திரு க்கிறோம். சில கேட்ச் வாய்ப்புகளை இழந்தோம். போட்டிகளில் இது நடப்பதுதான். இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

பேட்டிங்கில் ஒவ்வொரு பந்தாக கணித்து ஆட வேண்டியது முக்கியம். முந்தைய பந்தில் எப்படி ஆடினோம் என்று சிந்தித்து கொண்டிருந்தால் அடுத்த பந்தை சரியாக எதிர்கொள்ள முடியாது’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com