"நேரில் வந்து வீட்டை பாருங்கள் தோனி" ரசிகரின் அன்பு கோரிக்கை !

"நேரில் வந்து வீட்டை பாருங்கள் தோனி" ரசிகரின் அன்பு கோரிக்கை !
"நேரில் வந்து வீட்டை பாருங்கள் தோனி" ரசிகரின் அன்பு கோரிக்கை !

தனக்காக வீட்டை மாற்றிய ரசிகருக்கு நன்றி தெரிவித்த தோனி. ரசிகர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். இவர் துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான கோபிகிருஷ்ணன் கிரிக்கெட் வீரர் தோனி மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்.


தோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்த கோபிகிருஷ்ணன் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். தோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தை தனது வீட்டிற்கு வண்ணமாக பூசிய தோடு, தோனி படத்தினையும் சுவரில் வரைந்துள்ளார்.


வீட்டின் முகப்பு பகுதியில் ஹோம் ஆப் தோனி ஃபேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. தோனிகாக மாற்றி அமைக்கப்பட்ட இந்த வீட்டினை ஏராளமான பொதுமக்கள் கண்டும் ரசித்தும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரப்பியதால் இதுபற்றி அறிந்த கிரிக்கெட் வீரர் தோனி சில நாட்களுக்கு முன்பு தனக்காக வீட்டை மாற்றி அமைத்த ரசிகருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்ததாக சமூகவலைதளத்தில் வெளியானது.


இதையடுத்து கோபி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். நன்றி தெரிவித்த தோனிக்கு கோபிகிருஷ்ணன் நன்றி தெரிவித்ததுடன் அன்பு கோரிக்கையாக கிரிக்கெட் வீரர் தோனி தனது கிராமத்திற்கு வந்து தனது வீட்டை நேரில் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com