அணிக்குள் வீரர்..வலைக்குள் பயிற்சியாளர்: வைரலாகும் தோனி படங்கள்..!
இந்திய அணியில் மட்டும்தான் ஒரு வீரரே, பயிற்சியாளராகவும் திகழ்வதாக, மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்காக நேற்று இந்திய அணி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.
இதில், தோனி சக வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற படங்களையும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை நடத்துவது போன்ற படங்களையும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அதில், இந்திய அணியில் மட்டும் தான் ஒரு வீரரே, பயிற்சியாளராகவும் திகழ்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்திய அணி 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய போது, ஹர்திக் பாண்டியா 30 ரன்கள் எடுத்த நிலையில் 40.1-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது, ரசிகர் எந்தவொரு வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் சந்தோஷமடைந்தனர். ஏனெனில் அடுத்ததாக தோனி களமிறங்கினார். அவர் களமிறங்கிய போது ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர்.
தோனி, இந்தப் போட்டியில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்தார். இதுவரை அவர் 9800 ரன்கள் எடுத்துள்ளார். 10 ஆயிரம் ரன்களை தோனி எட்ட இன்னும் 200 ரன்கள் மட்டுமே தேவை.