\
சத்தமில்லாமல் சாதித்த டிராவிட் ஆர்மி (படங்கள்)

சத்தமில்லாமல் சாதித்த டிராவிட் ஆர்மி (படங்கள்)

சத்தமில்லாமல் சாதித்த டிராவிட் ஆர்மி (படங்கள்)
Published on

ஜூனியர் உலகக் கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றி  இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதனை படைத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதன் இறுதிபோட்டி அங்குள்ள மவுன்ட் மவுங்குனியில் இன்று நடந்தது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கியது. 

ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சி காரணமாக, இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டதால், இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜேசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 38.5 ஓவரில் 220 ரன் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம், இந்த உலகக் கோப்பையை இந்திய அணி, நான்காவது முறையாகக் கைப்பற்றியுள்ளது. உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com