சர்வதேச கால்பந்தாட்ட விருது அறிவிப்பு....  சிறந்த வீரராக ரொனல்டோ தேர்வு

சர்வதேச கால்பந்தாட்ட விருது அறிவிப்பு.... சிறந்த வீரராக ரொனல்டோ தேர்வு

சர்வதேச கால்பந்தாட்ட விருது அறிவிப்பு.... சிறந்த வீரராக ரொனல்டோ தேர்வு
Published on

சர்வதேச கால்பந்தில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கான ஃபிஃபா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த வீரராக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனல்டோவும், சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்லி லாயிட் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்தாண்டு நடைபெற்ற யூரோ கோப்பை தொடரில் ரொனல்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் ரொனல்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மேட்ரிட் பட்டம் வென்றது. இந்த காரணங்களில் கடந்தாண்டின் சிறந்த வீரருக்கான விருதினை ரொனால்டோ வென்றார்.

சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்லி லாயிட் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதினை தொடர்ந்து இரண்டாவது முறையாகப்‌ பெறுகிறார் கார்லி லாயிட்.

சிறந்த கோலுக்கான விருதினை மலேசியாவைச் சேர்ந்த முகம்மது பாயிஸ் சுப்ரி பெற்றார். இத்தகைய விருதினைப் பெறும் முதல் ஆசிரியர் என்ற பெருமையையும் சுப்ரிக்கு கிடைத்துள்ளது. மலேசியன் சூப்பர் லீக் போட்டிகளின் போது ஃப்ரீ கிக் முறையில் அவர் அடித்த சிறப்பான கோலிற்காக இந்த விருதினை பெற்றார்.

ஆடவர் பிரிவில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு கிளாடியோ ரானியேரி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு லீசெஸ்டயர் அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு வித்திட்டதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

மகளிர் பிரிவில் சிறந்த பயிற்சியாளருக்கா விருதினை ஜெர்ம‌னி‌யைச் சேர்ந்த சில்வியா‌ நெ‌ய்டு பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக அவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார். 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிலும் இதே விருது சில்வியாவிற்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com