ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்கான டெஸ்ட் அணி அறிவிப்பு - யார்க்கர் நடராஜனும் செல்கிறார்!

ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்கான டெஸ்ட் அணி அறிவிப்பு - யார்க்கர் நடராஜனும் செல்கிறார்!

ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்கான டெஸ்ட் அணி அறிவிப்பு - யார்க்கர் நடராஜனும் செல்கிறார்!
Published on

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 

இந்த தொடருக்கான அட்டவணைகள் இரண்டு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 3ஆம் தேதி தொடர் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான டெஸ்ட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், சைனி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அஷ்வின், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இவர்கள் தவிர கூடுதலாக நான்கு பவுலர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உள்ளது பிசிசிஐ. 

கமலேஷ் நாகக்கோடி, கார்த்திக் தியாகி, இஷான் போரல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் அந்த பட்டியலில் உள்ளனர். 

மேலும் ரோகித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மாவின் காயத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது பிசிசிஐயின் மருத்துவ குழு. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com