கத்தாருக்குத் தடை... உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பாதிப்பில்லை

கத்தாருக்குத் தடை... உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பாதிப்பில்லை

கத்தாருக்குத் தடை... உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பாதிப்பில்லை
Published on

அரபுநாடுகளின்  தடையால் கத்தாரில் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி பாதிக்காது என ஃபிபா கூறியுள்ளது.

அரபு நாடுகள் காத்தாரை ஒதுக்கி வைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அங்கு 2022ம் ஆண்டு நடைபெற உள்ள பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு சிக்கல் வராது என பிஃபா கூறியுள்ளது.

ஐஎஸ் அமைப்பினருக்கு  ஆதரவளித்து தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிஅப், ஏமன்,  மௌரிடானியா ஆகிய நாடுகள் கத்தாரை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதால்  2022ம் ஆண்டி நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தாரில் நடத்தக் கூடாது என அரபுநாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
6 அரேபிய நாடுகள் ஃபிபா உலகக் கோப்பை போட்டியை நடத்தக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து ஃபிபா அமைப்புக்கு கடிதம் எழுதியதாக ஸ்விஸ் நாட்டு இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. 

இதுகுறித்து பேசிய ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ, கத்தாரில் நடக்கும் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்தக்கூடாது என எந்த நாடும் இதுவரை கடிதம் அனுப்பவில்லை. இந்தக் கடித விவகாரம் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. ஃபிபா அமைப்புடன் கத்தாரில் உலகக் கோப்பையை நடத்தும் கமிட்டிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றன. மற்ற நாடுகள் ஏற்படுத்தி இருக்கும் இப்போதைய சிக்கல் கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பாதிக்காது என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com