விளையாட்டு
‘வார்னேவின் ‘Ball of The Century’ பந்தை விட சிறந்தது சச்சினுக்கு நான் வீசிய பந்து’ பனேசர்
‘வார்னேவின் ‘Ball of The Century’ பந்தை விட சிறந்தது சச்சினுக்கு நான் வீசிய பந்து’ பனேசர்
இங்கிலாந்து அணி கடந்த 2012இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அந்த தொடரை வென்றது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது மாண்டி பனேசரின் சுழற்பந்து வீச்சு தான். சூழலுக்கு ஏற்ற இந்திய ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை பனேசர் தனது பந்துகளால் திக்குமுக்காட செய்தார்.
மூன்று போட்டிகள் விளையாடிய பனேசர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதில் மும்பையில் அவரது பந்தில் சச்சின் அவுட்டாகியிருந்தார்.
‘வார்னேவின் ‘Ball of The Century’ பந்தை விட சிறந்தது சச்சினுக்கு நான் அன்று வீசிய பந்து. அந்த பந்தின் லெந்தை அவர் சரியாக எடை போடாததால் அவுட்டானார்’ என தெரிவித்துள்ளார் பனேசர்.