\
ஏலம் சூதாட்டத்தின் இல்லம்: அஸ்வின்

ஏலம் சூதாட்டத்தின் இல்லம்: அஸ்வின்

ஏலம் சூதாட்டத்தின் இல்லம்: அஸ்வின்
Published on: 

ஏலம் எப்போதும் சூதாட்டத்தின் இல்லம் என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

‌நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா தக்க வைக்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி பங்கேற்றது. அஸ்வினை, சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. மாறாக ஹர்பஜன் சிங்கை அந்த அணி எடுத்தது.அஸ்வினை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின், ஏலம் எப்போதும் சூதாட்டத்தின் இல்லம். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணைந்தது மகிழ்ச்சி. சிறந்த நினைவுகளை அளித்த சென்னை அணிக்கு நன்றி’ எனவும் தெரிவித்துள்ளார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com