மனிகா பத்ராவுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை

மனிகா பத்ராவுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை

மனிகா பத்ராவுக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை
Published on

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ராவுக்கு அர்ஜூனா விருது வழங்க டேபிள் டென்னிஸ் சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டெல்லியை சேர்ந்த 22 வயது மனிகா பத்ரா  காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் ஒற்றையர் மற்றும் குழு பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார். கான்வெல்த் விளையாட்டில் மகளிர் டேபிள் டென்னிஸில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாக அமைந்தது. குறிப்பாக மூன்று முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள சிங்கப்பூர் வீராங்கனை ஃபெங் டியான்வெய்யை மனிகா பத்ரா இரு முறை தோற்கடித்தார். இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ள மனிகா பத்ராவுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்குமாறு இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com