இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லப்போவது யார்?
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

கேப்டவுனில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில் 3 ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடாத கேப்டன் கோலி, தான் அணிக்கு திரும்புவதை உறுதி செய்துள்ளார். காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com