உசைன் போல்ட் சாதனையை முறியடிப்பதே இலக்கு - தமிழக வீரரின் நம்பிக்கை
அரக்கோணம் நேருஜி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் அருள்குமார். குங்ஃபூ பயிற்சியாளராக உள்ள இவருக்கு இரண்டு பிள்ளைகள். முதலாவது மகன் நிதிஷ்குமார் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு முடித்தவர். இவர் குஜராத் மாநிலம் வாபியில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான 16 வயதாகும் நிதிஷ்குமார் பங்குபெற்று 11.02 நேரம் அளவில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
தங்கப்பதக்கம் வென்ற நிதீஷ் குமார் மும்பையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லு ம் மும்பை விரைவு ரயிலில் அரக்கோணம் வந்த நிதீஷ் குமாருக்கு, தந்தை அருண்குமார் தாய் ஷோபனா தேவி பயிற்சியாளர் நாகராஜ் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆசிரியர்கள் என பேண்ட் வாத்தியம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றதற்கு பயிற்சியாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் தன்னுடைய முழு முயற்சியில் இந்த பதக்கம் வென்று உள்ளதாகவும் தெரிவித்தார். பல்வேறு பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்று தருவதே தனது இலக்கு என்றும் உலக அளவில் நடைபெறும் ஒலிம்பிக் பந்தயத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் சாதனையை முறியடிப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

