"2017 சாம்பியன்ஸ் டிராபி விளையாடிய போது இங்கிலாந்து ரெட் அலார்ட்டில் இருந்தது" - ஹஃபீஸ்

"2017 சாம்பியன்ஸ் டிராபி விளையாடிய போது இங்கிலாந்து ரெட் அலார்ட்டில் இருந்தது" - ஹஃபீஸ்
"2017 சாம்பியன்ஸ் டிராபி விளையாடிய போது இங்கிலாந்து ரெட் அலார்ட்டில் இருந்தது" - ஹஃபீஸ்

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தனர். இருந்தும் கடைசி நேரத்தில் அந்த தொடர்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. அந்த செயல் கிரிக்கெட் உலகில் விவாத பொருளாகவும் எழுந்துள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹஃபீஸ் இது குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். 

“முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நியூசிலாந்து அணி எந்தவொரு காரணமும் இல்லாமல் இந்த தொடரை ரத்து செய்துள்ளது என்பதை நான் சொல்லவில்லை. நான் பல்வேறு நாடுகளுக்கு பாகிஸ்தான் அணியுடன் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளேன். அங்கு நிலவும் சவாலான சூழலையும் கடந்து நாங்கள் கிரிக்கெட் விளையாடி, தொடரை நிறைவு செய்துவிட்டே நாடு திரும்பியுள்ளோம். கிரிக்கெட் மீது நாங்கள் கொண்டுள்ள தீராத காதலினால் கொரோனா சூழலிலும் 14 நாட்கள் குவாரன்டைனில் இருந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடி உள்ளோம். நியூசிலாந்து அணியின் இந்த செயல் எங்கள் நெஞ்சை மிகவும் புண்படுத்தி விட்டது. 

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இங்கிலாந்து நாடே ரெட் அலார்டில் இருந்தது. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நாங்கள் அந்த தொடரில் விளையாடி, சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தோம்” என ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com