மிஸ் பீல்ட் செய்த சான்ட்னர்! அந்த ஒரு ரன்னில் பறிபோனது நியூ. வெற்றி! தப்பியது இந்திய அணி!

மிஸ் பீல்ட் செய்த சான்ட்னர்! அந்த ஒரு ரன்னில் பறிபோனது நியூ. வெற்றி! தப்பியது இந்திய அணி!

மிஸ் பீல்ட் செய்த சான்ட்னர்! அந்த ஒரு ரன்னில் பறிபோனது நியூ. வெற்றி! தப்பியது இந்திய அணி!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3ஆவது டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் டை ஆனதாக செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடரை முடிவு செய்யும் கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி இன்று காலை 12 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மழையின் பாதிப்பால் தாமதாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலனை வீசிய முதல் ஓவரிலேயே வெளியேற்றினார் இடதுகை பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங். விக்கெட் விழுந்தாலும் தொடர்ந்து அதிரடி காட்டினார் இன்பார்ம் வீரரான டெவான் கான்வே. 44 ரன்களில் வில்லியம்சனிற்கு பதிலாக களமிறக்கப்பட்ட சாப்மன் அவுட்டாகி வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த கான்வே மற்றும் பிலிப்ஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

86 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இவர்களின் கூட்டணியை 16 ஆவது ஓவரில் பிரித்தார் முகமது சிராஜ். 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 54 ரன்களுக்கு பிலிப்ஸ் அவுட்டாகி வெளியேற, 59 ரன்களில் விளையாடிய கான்வேவை வெளியேற்றினார் அர்ஸ்தீப் சிங். தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிக்காட்டிய அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் இருவரும் ஒரே போட்டியில் முதல்முறையாக இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் சேர்த்தது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர் இஷான் கிஷனை 10 ரன்களில் வெளியேற்றினார் மில்னே. தொடர்ந்து பந்துவீச வந்த கேப்டன் டிம் சவுத்தி, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரையும் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் வெளியேற்றி அசத்த, 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. அதன் பிறகு கைக்கோர்த்த சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அடுத்து பந்துவீச வந்த இஷ் சோதி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடுத்து இண்டண்ட் காமித்த சூர்யகுமார் யாதவை அவுட்டாக்கி வெளியேற்ற அழுத்தம் இந்திய அணிக்கு அதிகமானது.

என்னதான் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தாலும் தொடர்ந்து பவுண்டரிகள், சிக்சர் என விளாசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன்ரேட்டை குறையாமல் பார்த்துகொண்டார். 6ஆவது ஓவரில் பெர்குசன் வீசிய பந்தை ஹர்திக் பாண்டியா அடிக்க பேட்டில் பட்டது போல் விக்கெட்டுக்காக கத்தினார் பவுலர். ஆனால் விக்கெட் கீப்பர் எந்த விதமான சைகையும் செய்யாததால் ரிவ்யூ எடுக்காமல் தவறவிட்டது நியூசிலாந்து. பின்னர் ரீப்ளேயில் பந்து பேட்டில் பட்டு சென்றது. தொடர்ந்து 6ஆவது ஓவரிலேயே மழை தூரல் ஆரம்பித்து விட்டதின் காரணமாக டிஎல்எஸ்-கான ரன்களின் எண்ணிக்கையை என்ன ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். 9 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் ட்க்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் டிரா செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி 1-0 என்ற விகிதத்தில் டி20 தொடரை வென்றது.

ஆட்ட நாயகன் & தொடர் நாயகன்

4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 போட்டிகளில் தனது சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி அசத்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரில் சதமடித்து அசத்திய சூரியகுமார் யாதவ் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூசிலாந்தின் வெற்றியை பறித்த அந்த 1 ரன்

மழையால் ஆட்டம் தடைபட்டால் இந்திய அணி வெற்றிபெற 9 ஓவர்களில் 76 ரன்கள் தேவையாக இருந்தது. இந்நிலையில் 9ஆவது ஓவரின் கடைசிபந்து வீசும்போது இந்திய அணி 74 ரன்களில் இருந்தது. அப்போது ஹூடா அடித்த பந்தை பிடிக்கும் போது மிஸ்ஃபீல்ட் செய்தார் மிட்சல் சேண்டனர். அப்போது ஒரு ரன் இந்தியா பெற்றதால் 75 ரன்களில் போட்டி டை செய்யப்பட்டது. அந்த ஒரு ரன் தான் நியூசிலாந்தின் வெற்றியை பறித்தது. ஒருவேளை அந்த பந்தை சரியாக பிடித்து த்ரோ செய்திருந்தால் இந்த போட்டியை நியூசிலாந்து அணி வெற்றிபெற்றிருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com