இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காததால், அந்த அணியின் கேப்டன் தாரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாமல், 3 ஓவர்கள் தாமதமாக வீசியது. கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் போதும் இலங்கை அணி இதே பிரச்னையில் சிக்கியது. இதுபற்றி விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட், மூன்று மாதத்துக்குள் 2-வது முறையாக மெதுவாக பந்து வீசியதால், இலங்கை கேப்டன் உபுல் தரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதித்தார்.
தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அடுத்த இரு ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் பொறுப்பு கேப்டனாக சமரா கபுகேதரா செயல்படுகிறார். டெஸ்ட் அணி கேப்டன் தினேஷ் சண்டிமால், திரிமன்னே ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.