விளையாட்டு
டெஸ்ட் தரவரிசை... ஹெராத்தைப் பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்
டெஸ்ட் தரவரிசை... ஹெராத்தைப் பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்துக்கு மீண்டும் முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தைப் பின்னுக்குத் தள்ளி, அஸ்வின் மீண்டும் இரண்டாம் இடம் பிடித்தார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட்களை வீழ்த்தியதால், அவர் ஒரு இடம் முன்னேற்றம் அடைந்துள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் புஜாரா 4ஆவது இடத்திலும், கேப்டன் விராத் கோலி 5ஆவது இடத்திலும் தொடர்கின்றனர்.