Marketa Vondrousovapt desk
டென்னிஸ்
பாரிஸ் ஒலிம்பிக்: போட்டியில் இருந்து விலகுவதாக டென்னிஸ் வீராங்கனை மார்க்கெட்டா அறிவிப்பு!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை மார்க்கெட்டா வோன்ட்ரூசோவா அறிவித்துள்ளார்.
25 வயதான அவர், 2022ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றார். அத்துடன் 2023ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டமும் வென்றிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்த மார்க்கெட்டா, காயம் காரணமாக பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
Marketa Vondrousovapt desk
டென்னிஸ் தரவரிசையில் 6ஆம் இடத்தில் உள்ள அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு நடந்த பிரஞ்சு ஓபனில் காலிறுதி சுற்றுடன் மார்க்கெட்டா வெளியேறிய நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்சுற்றில் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.